திருச்சி மத்திய சிறையில் அடிப்படை 6 மாத கால பயிற்சியை 197 சிறைக் காவலர்கள் இன்று (03.02.2021) நிறைவு செய்தனர். இந்த விழாவில் 176 ஆண் சிறைக் காவலர்களும் 21 பெண் சிறைக் காவலர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புழல் வேலூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உள்ளிட்ட சிறைகளில் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டம் சார்ந்த விதிமுறைகளையும் அடிப்படை சட்டங்களையும் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்து. மேலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளையும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆறுமாத காலமாக திருச்சி மத்திய சிறையில் இருந்து தங்களுடைய பயிற்சியை முடித்திருக்கக் கூடிய இந்த சிறைக்காவலர்கள், இன்று தங்களுடைய பயிற்சியை நிறைவு செய்து அதற்கான அணிவகுப்பு மரியாதையை செலுத்தினார்கள்.
இந்த அணிவகுப்பு மரியாதையை சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைவர் சுனில் குமார் சிங் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்தப் பயிற்சி நிறைவு விழாவில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் சிறை பயிற்சிப் பள்ளியின் முதல்வர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி முடித்த காவலர்கள் தங்களுடைய பயிற்சி காலத்தில் அவர்கள் செய்த சில பயிற்சிகளை செய்து காண்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயராமன் IPS காவல்துறை தலைவர் திருச்சி மண்டலம், லோகநாதன் IPS காவல் ஆணையர் திருச்சி மாநகர், ஆனி விஜயா IPS திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் முதலாம் அணி தளவாய் திரு ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.