
கடலூரில் இருந்து கெடிலும் வழியாக 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று உளுந்தூர்பேட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து தடை செய்யப்பட்ட பகுதியான சேந்தநாடு - உளுந்தூர்பேட்டை குறுக்கு சாலையைக் கடந்த போது விழுப்புரம் மார்க்கமாக டீசல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டவர்களுக்குப் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் போக்குவரத்துறை போலீசார் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் சிக்கி சாலையில் நின்ற வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதியில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டினர் மற்றும் நடத்துனரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்துகள் மற்றும் கனராக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியில் தனியார் பேருந்து சென்ற போது டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.