
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 18வது சீசன் இன்று (22-03-25) கோலகலமாகத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களமாடி விளையாடி வருகிறது. இதில், 2 ஓவர் முடிவில், 5 ரன்கள் எடுத்துள்ளது. 4 ரன்கள் எடுத்த குயின்டன் டி காக் அவுட் ஆகியுள்ளார். சுனில் நரைன் மற்றும் அஜிங்க்யா ரஹானே (கேப்டன்) ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங் , ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதே போல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம் , சுயாஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.