Skip to main content

ஜூலை 13 முதல் கொத்தவால்சாவடியில் போக்குவரத்து மாற்றம்...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
 Traffic change in Kottavalsavadi from July 13

 

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகளில் விதிமீறல்கள் இருந்தால் ஆதாரத்துடன் 14 நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் காவல் நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

 

அதேபோல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 1,185 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 76,000-ஐ கடந்தது. 76,150 பேருக்கு இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால், இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக சென்னையில் இதுவரை 1,221 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

 

இந்நிலையில் சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் ஜூலை 13-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்