அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஆபத்தான முறையில் கட்டடத்தின் மேற்கூரையைச் சுத்தம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் இருக்கும் ஓட்டுக் கட்டடம் ஒன்றில் ஆபத்தை உணராமல் கூரையின் மீது ஏறி சுத்தம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும், பொதுவாக மாணவர்களை பள்ளியில் எந்த வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு எச்சரித்த நிலையிலும், எந்த விதபாதுகாப்பு உபகாரணக்கள் இன்றி மேல் கூறையின் மீது அமர்ந்து சுத்தம் செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் இதற்குக் காரணமாக ஆசிரியர்கள் மீதும், பள்ளியின் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.