வேல்முருகன் கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
தூத்துக்குடியில் கலவரத்தாலும், துப்பாக்கிசூட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை காவல்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளது.
சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்க கட்டண எதிர்ப்பு தெரிவித்து அவர் நடத்திய போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக, இப்போது அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை கூறுவதை ஏற்க முடியவில்லை. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தூத்துக்குடி சம்பவத்தை முன்னிட்டு கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும், அதை கண்டிகிறோம். பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை யாரும் சென்று சந்தித்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுபோன்ற போக்குகள் தமிழக காவல்துறைக்கு மேலும் களங்கங்களையே உருவாக்கும் என்பதை சுட்டுக் காட்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.