கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை என்பது கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் 80 முதல் 90 ரூபாய்க்கு தக்காளியானது விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதேநேரம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
வெளிமாநில தக்காளி வரவு 50 சதவீதம் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 85 லாரிகளில் 750 டன் தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சேரும், ஆனால் இன்று 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருந்தது. இந்த தட்டுப்பாடு காரணமாகவே தக்காளி விலை திடீரென அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு தொடர்ந்தால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.