Skip to main content

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

tiruvannamalai karthigai deepam festival

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

 

இன்று (29/11/2020) அதிகாலை 04.00 மணியளவில் கோயில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 06.00 மணிக்கு 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியைப் பயன்படுத்தி 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, முதல் முறையாக பக்தர்கள் அனுமதியின்றி திருவண்ணாமலை கோயிலில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. 

 

நவம்பர் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா சிகர நிகழ்ச்சியான மகா தீபத்துடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்