Skip to main content

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திடீர் யாக பூஜைகள்! 

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

tindivanam taluk office new tahsildar charged and conducted special pooja

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி அதிகாலையில் வட்டாட்சியர் அலுவலக அறையில் கணபதி ஹோமம் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அலுவலக வாசலில் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி பரிகாரம் செய்யப்பட்டது. மேலும் வட்டாட்சியர் பயன்படுத்தும் அரசு வாகனத்திற்கும் மாலை அணிவித்து தீபம் காட்டி வழிபாடு செய்து திருஷ்டி கழித்துள்ளனர்.

 

இந்த திடீர் யாக பூஜை வழிபாடு ஏன் என வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது இங்கு ஏற்கனவே வட்டாட்சியராக சிறப்பாக பணி செய்த வெங்கடசுப்பிரமணியம், மக்கள் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த அவர், காஞ்சிபுரம் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தபோது வந்தவாசி அருகே சாலை விபத்தில் வெங்கடசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் வெங்கடசுப்பிரமணியன் மரணம் அடைந்த காரணத்தால் யாகமும், சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இதையடுத்து வெங்கடசுப்பிரமணியம் பணியாற்றி வந்த திண்டிவனம் வட்டாட்சியர் பதவிக்கு, மேல்மலையனூர் வட்டாட்சியராக இருந்த அலெக்சாண்டர் என்பவர் திண்டிவனம் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பரிகார பூஜைகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு புதிய வட்டாட்சியராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர், திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் புதிய வட்டாட்சியருக்கு மட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வெங்கடசுப்பிரமணியன் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து அனைவரும் மீள்வதற்காகவே இந்த யாக பூஜை மற்றும் திருஷ்டி பரிகாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென யாக பூஜைகள் நடைபெற்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்