![Three passes away in cuddalore police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xq7umUT_2Twg81RdDhAbgo67eRPrISxUCxjwwhUjhHw/1683997925/sites/default/files/inline-images/th_4139.jpg)
கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணியில் கட்டிட கொத்தனார்கள் பாலசந்தர், சக்திவேல் உடன் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி இருந்துள்ளார்.
அப்போது கட்டிட கொத்தனார் பாலசந்தர் (32) என்பவர் விஷவாய்வு தாக்கி உள்ளே விழுந்தார். அவரை மீட்க சக்திவேலும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி முயன்றனர். அப்போது இவர்கள் இருவரும் விஷ வாயு தாக்கி செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துள்ளனர்.
மூன்று பேரும் விஷவாய்வு தாக்கி விழுந்த நிலையில், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
அதன் பின் அவர்கள் மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஶ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் விஷவாய்வு தாக்கி உயிரிழந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.