Published on 24/09/2020 | Edited on 24/09/2020
![THREE MORE SPECIAL TRAINS ANNOUNCED SOUTHERN RAILWAY](http://image.nakkheeran.in/cdn/farfuture/cPQ2TT60vUWKGUncnBWE18rFzPVIvpHrMig57152TD0/1600940050/sites/default/files/inline-images/Southern-Railways-trains-speed%20%281%29.jpg)
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும், செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருவுக்கு தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.