Skip to main content

செஸ் ஒலிம்பியாட்: அதிரடி உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர்

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

chess olympiad Ban on flying drones

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ்  ஒலிம்பியாட் தொடரானது 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

 

அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பாதுகாப்பு கருதி போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.