தமிழிசைக்கு கொலை மிரட்டல்
பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் அவரது வக்கீல் தங்கமணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,‘ கடந்த 4 நாட்களாக தனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சிலர் ஆபாசமாக பேசுவதாகவும், தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்களின் செல்போன் எண் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களின் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.