திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை மூடிவிட்டு காலவரையற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைத்திட வேண்டும், அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கிட வேண்டும், கூட்டுறவுத் துறை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு TNCSC க்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.