நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணயம் ஒதுக்கிட்டுள்ளது. கூட்டணி வைப்போம் அல்லது தனித்தாவது நாற்பது தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் தெரிவிக்கிறார்.
இந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சி தொடங்கியுள்ள நடிகர்கள் நாடாளுமன்றத் தேர்தலுடன் காணாமல் போவார்கள். எதுகை மோனையில் பேசிய டி.ஆர் கட்சி தொடங்கி அவரால் நிலையாய் கட்சி நடத்த முடியவில்லையே. அரசியலுக்கு நடிகர்கள் வியாபார நோக்குடன் தான் வருகிறார்கள். ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பது அவருடைய சாணக்கியத்தனத்தைக் காட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.