

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை ஏழாவது நாளாக திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் 21 மாத நிலுவை தொகை, ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல்துறையால் தயிர் சாதம் வழங்கப்பட்டது.
தயிர் சாதத்தில் புழுக்கள் காணப்பட்டது. இதனை கண்ட சத்துணவு பணியாளர்கள் காவல் துறையினரிடம் முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதயைடுத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாற்று உணவு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்ததின் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் காவல் துறையினரால் அங்கிருந்த தயிர் சாதத்தை கிழே கொட்டி சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.