![k1](http://image.nakkheeran.in/cdn/farfuture/lc3H47Skz50m9izMH218lVduZ5yyngDZ-LeJ2XYIhSw/1606627706/sites/default/files/2020-11/karthigai8966.jpg)
![k2](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fo9PpUaZMXbjrucNJf2b2R2ZdIEgaOvKf9aOs1jC840/1606627706/sites/default/files/2020-11/karthi43.jpg)
![k3](http://image.nakkheeran.in/cdn/farfuture/-rRTliGa_pEef2SRnuPspSiE_8ZGI0M92r-USWt-4v8/1606627706/sites/default/files/2020-11/kart44.jpg)
Published on 29/11/2020 | Edited on 29/11/2020
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாளான இன்று (நவம்பர் 29) அதிகாலை கோவில் கருவறை முன்பு உள்ள மண்டபத்தில் 03.18 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோசத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கோயில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.