சிவகங்கை தமிழவையம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கைக் கிளை இணைந்து இரண்டாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடினர். அகை ஆதிரை நாட்டியப் பள்ளியின் கலை நிகழ்வோடு தொடங்கி கவியரங்கம், கருத்தரங்கம்,பாராட்டு நிகழ்வு ஆகியன நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நா. சுந்தரராஜன் வரவேற்புரைத்தார். தமிழ்ச்செம்மல் சொ.பகிரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். சிவகங்கையின் மூத்த வழக்கறிஞர் ராம் பிரபாகர், சிவகங்கை தமிழவையத்தைச் சேர்ந்த வித்யா கணபதி, மேனாள் தோட்டக்கலை உதவி இயக்குனர் பா. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு இராணியார் டி. எஸ். கே மதுராந்தகி நாச்சியார், அய்யன் திருவள்ளுவர் தமிழோசை மன்ற நிறுவனர் மருத்துவர் அர்ஜுனன், மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர் பா. நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
திருக்குறளை தலைகீழாக முற்றோதல் செய்யும் தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் மற்றும் திருக்குறளை சிறப்பாக முற்றோதல் செய்யும் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவன் கர்னிக் ஆகியோர் குறளால் பாராட்டு பெற்றனர். இந்நிகழ்விற்கு சிவகங்கை தமிழ்ச்சங்கத் தலைவர் அன்புத்துரை, இரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்துக் கண்ணன், சாக்கவயல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜ. ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.
குறள்பாடும் குயில்கள் எனும் சிறப்பு நிகழ்வாக ‘உடைமை’ எனும் பொதுத்தலைப்பில் புலவர் கா. காளிராசா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. ‘அன்புடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற்கண்ணி, ‘அறிவுடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் அகமது திப்புசுல்தான், ‘ஒழுக்கமுடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் வனிதா, ‘பண்புடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் எட்வின், ‘அடக்கமுடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் உஷா, ‘ஆள்வினை உடைமை’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணன் ஆகியோர் கவிதை பாடினர்.
நிகழ்வின் இறுதியில் சிவகங்கை தமிழவைய ஒருங்கிணைப்பாளர் புலவர் கா. காளிராசா நன்றி கூறினார். மேலும் இவ்வமைப்பு கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர். மேனாள் கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார், தமிழாசிரியர் லோகமித்ரா, அந்தோணி, சாம்பவிகா பள்ளி தாளாளர் சேகர், சுக்ரா சோமசுந்தரம்,மலைராம் பாண்டிவேல் அரிமா முத்துப்பாண்டியன்,சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.