Skip to main content

திருமழிசையில் காய்கறி சந்தை - படங்கள்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் காற்கறி சந்தை அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு சந்தை எவ்வாறு அமைக்கப்பட்டது என்று ஆய்வு செய்தனர். மேலும் சில ஆலோசனைகளையும் இந்த ஆய்வின்போது வழங்கினர்.
 

நேற்று தொடங்கப்பட்ட இந்தச் சந்தைக்கு 200க்கும் மேற்பட்ட லாரிகளில் 5 ஆயிரம் டன் அளவிற்குக் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் காய்கறிகளின் விலைகள் கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்தன என்றும் தற்போது இந்தச் சந்தை தொடங்கப்பட்டதால் காய்கறிகள் விலை சற்று குறைந்திருப்பதாக வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். 


 

சார்ந்த செய்திகள்