Published on 02/04/2020 | Edited on 02/04/2020
தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து 28 மளிகைப் பொருட்கள் ரூபாய் 2 ஆயிரத்துக்கு வீடு தேடி வரும் திட்டத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் உழவர் சந்தையில் ரூபாய் 150-க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது துணை முதல்வருடன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.