Published on 13/12/2020 | Edited on 13/12/2020

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் முதற்கட்ட பரப்புரையை கமல்ஹாசன் இன்று முதல் டிசம்பர் 16- ஆம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மதுரைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "சட்டமன்றத் தேர்தலுக்கான எங்களுடைய பிரச்சாரம் தொடங்கிவிட்டது. பல இடங்களில் அனுமதிக் கொடுத்திருக்கிறார்கள்; கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் எங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் பிரச்சாரம் செய்வோம். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பது மக்களுக்கே தெரியும்." என்றார்.