கடந்த சில நாட்களாக தேர்தல் பரப்புரையின் போது போதையின் உச்சத்திற்கு போன அமமுக வேட்பாளரின் மகன் பிரச்சார வாகனத்தில் ஏறி குத்தாட்டம் போட்டார் என்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரப்பிவிடப்படுகிறது.
இது உண்மைதானா? நமது விசாரனையில்..

தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் களம் கூடாகி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எப்படி கொடுப்பது மின்சாரத்தை நிறுத்தலாமா? என்ற பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர் சிலர்.
இந்த நிலையில் தான் அமமுக வேட்பாளர் ரெங்கசாமியின் மகன் மனோபாலா தேர்தல் பரப்புரையின் போது போதையின் உச்சத்தில் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி குத்தாட்டம் போடுறார். வாக்குப் பதிவுக்கு முன்பே இப்படின்னா.. வெற்றி பெற்றால் என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரப்பப்படுகிறது.

இது பற்றி அமமுகவினரோ.. இந்த வீடியோ 6 மாதம் முன்பு ஒரு பிறந்த நாளில் எடுக்கப்பட்டது. தேர்தல் பரப்புரையில் இல்லை. ஆனால் இப்ப அதிமுகவினர் இப்படி பரப்பி வருகிறார்கள் என்றனர்.
அதிமுகவினரோ.. எப்பவோ குத்தாட்டம் போட்டது உண்மை தானே என்கிறார்கள். இப்படி இவர்களின் அண்ணன் தம்பி சண்டையில மக்கள் வெருப்பாகி எங்க பக்கம் வருவாங்க என்று உற்சாகமடைந்துள்ளனர் திமுகவினர். தேர்தல் நேரத்துல தான்ப்பா இப்படி வீடியோ எல்லாம் வருது என்கிறார்கள் தொகுதி மக்கள்.