குமாி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற மிக முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டுத்தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் குமாி மற்றும் கேரளாவில் இருந்து லட்சகணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். இதில் அதிகம் பெண் பக்தா்களாகதான் இருப்பாா்கள். இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை பெண்களின் சபாிமலை என்று கூறுவாா்கள்.
![Telangana Governance Today Kanyakumari](/modules/blazyloading/images/loader.png)
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுத்தோறும் நடக்கும் திருவிழாவில் தற்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது தொடா்ந்து பங்கெடுத்துள்ளாா். மேலும் தன்னை ஒரு மண்டைக்காடு பகவதி அம்மனின் தீவிர பக்தராகவும் உணா்த்தி வந்தாா்.
இந்த நிலையில் இன்று திருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆளுநா் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் தேவசம் போா்டு அதிகாாிகள் வரவேற்றனா். இதையொட்டி மண்டைக்காடு கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டியிருந்தன. இதற்காக நேற்று இரவு தெலுங்கானாவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த தமிழிசை சௌந்தராஜன் கேரளா கவா்னா் மாளிகையில் தங்கினாா். பின்னா் இன்று காலை அங்கிருந்து காா் மூலம் மண்டைக்காடு வந்தாா்.