சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கினார். பின்னர் பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு மாணவர்களுக்கும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கலாநிதி கலந்து கொண்டு பதஞ்சலி மற்றும் திருமூலர் ஆகியோர்களின் யோகா பற்றிய சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினையும் வழங்கினார். முன்னதாகப் பொறியியல் புல முதல்வர் முருகப்பன் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், இணை, துணை இயக்குநர்கள், துணைப் பதிவாளர்கள், உதவிப் பதிவாளர்கள், பிரிவு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.