Published on 23/04/2020 | Edited on 24/04/2020
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது பொது சுகாதாரத்தை, நாட்டின் பொருளாதாரத்தை முடக்க வரும் உருவமற்ற எதிரியின் வீரியத்தை நம்மை மட்டுமல்ல சுற்றியுள்ளவரையும் பாதுகாக்க முகக்கவசம் அத்தியாவசியமானது. மாநகராட்சிகளின் விழிப்புணர்வு முயற்சிகளுக்கு தோள் கொடுப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.