Published on 13/05/2020 | Edited on 13/05/2020
![tamilnadu lockdown police vehicles peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/gHaA3Can1Y6GkZhSX7jEYqZDWuiXjLfDjv3iNE9lPlg/1589355772/sites/default/files/inline-images/traffic%20896.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் ரூபாய் 5.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,63,513 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் 3,82,588 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 4,37,148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.