இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விவாதம் நடக்க இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்கிறார்.
முதல் நிகழ்வாக முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மறைவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 22 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒன்பது அமைச்சர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஒன்பது ரத்தினங்களை அமரவைத்து அழகு பார்க்கும் முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி எனக்கூறினார்.
கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் லாடவரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு செங்கோட்டையன் நிலம் ஒதுக்கப்பட்ட இடங்களில் அரசு பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பேசும்போது, இந்தியாவின் இளம் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். புதுச்சேரி உட்பட 38 தொகுதிகளில் 52 சதவீத வாக்குகளுடன் மக்கள் ஆதரவோடு திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.