Skip to main content

21 இடங்களில் திமுக முன்னிலை

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில்  தபால் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.  தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னி்லையில் உள்ளது.  

 

r

 

தமிழகத்தில் 21 மக்களவை  இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.  ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலையில் உள்ளார்.  தூத்துக்குடியில் கனிமொழியும், நீலகிரியில் ஆ.ராசாவும், தஞ்சாவூரில் பழனிமாணிக்கம் வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் முன்னிலையில் உள்ளனர்.

 

பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னி்லையில் உள்ளார்.  திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலையில் உள்ளார்.   ஆரணியில் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார்.   திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலையில் உள்ளார்.  சிவகங்கையில் திமுக கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்.  சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலையில் உள்ளார்.  திருப்பூரில் திமுக கூட்டணி சிபிஐ  வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.  தென்சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியின் முன்னிலையில் உள்ளார்.    மதுரையில் திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர் மதிமுக கணேசமூர்த்தி முன்னிலையில் உள்ளார். வடசென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை.   
 

 


 

சார்ந்த செய்திகள்