Published on 21/11/2019 | Edited on 21/11/2019
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'ஷூ' , 'சாக்ஸ்' வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
![tamilnadu govt schools students shoes provide order issued](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Nu4NcZbTeR76ViI1ANsLZSRzkdtNoNGwnoyjFnjueY/1574333177/sites/default/files/inline-images/tn%20govt88.jpg)
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு விலையில்லா 'ஷூ' மற்றும் 'சாக்ஸ்' வழங்கப்படவுள்ளது. 2020- 2021 கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு 'ஷூ' மற்றும் 'சாக்ஸ்' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.