Skip to main content

தமிழகத்தில் கரோனா பலி 5 ஆக உயர்வு!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை சேர்ந்த 60 வயதான நபருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 1- ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (05/04/2020) அதிகாலை 01.45 மணிக்கு உயிரிழந்தார். 
 

tamilnadu coronavirus incident increase


ஏற்கனவே ராமநாதப்புரத்தைச் சேர்ந்த 71 வயதான நபர் கரோனா அறிகுறியுடன் ஏப்ரல் 2- ஆம் தேதி காலை 09.45 ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது ரத்த மாதிரியை எடுத்த மருத்துவர்கள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அன்றே (ஏப்ரல் 2- ஆம் தேதி) காலை 11.45 க்கே இறந்தார். இதனை தமிழக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே மதுரை, விழுப்புரம், தேனி அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். 

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 

 

சார்ந்த செய்திகள்