![tamilnadu complete lockdown for today coronavirus](http://image.nakkheeran.in/cdn/farfuture/1_Xjs4_79Z5FqhB5bbWnv-61G9yBgyp4qzEJqIps-U0/1598152882/sites/default/files/inline-images/l1%20%281%29.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுமின்றி தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
![tamilnadu complete lockdown for today coronavirus](http://image.nakkheeran.in/cdn/farfuture/YHISt2lLlPfUaJ7iK0iQ4jQXz55Wc7uwPyxFjhWmabI/1598152982/sites/default/files/inline-images/l2_0.jpg)
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று (23/08/2020) எவ்வித தளர்வும் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள், மருத்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் இன்று முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.