Skip to main content

"40 சதவிகித மக்கள் மாஸ்க் அணிவது இல்லை" -முதல்வர் பழனிசாமி!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

tamilnadu cm palanisamy speech

 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, 

 

"கரோனா படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம் பெறுவர். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளினிக் அமைக்கப்படும். 40% மக்கள் மாஸ்க் அணிவது இல்லை; மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும். டெங்கு கொசுவைத் தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளது. 

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும். ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்