Published on 14/07/2020 | Edited on 14/07/2020
'தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை' என்பது தெரியவந்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்று (13/07/2020) முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் முதல்வர் உள்பட யாருக்கும் கரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.