ஐ.ஐ.டி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30/09/2019) சென்னை வந்திருந்தார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூரில் ஆகிய இடங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வேண்டும்.
அதை தொடர்ந்து கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே மாலை நேர விமான சேவை தொடங்க வேண்டும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் ரூ.7,825 கோடியை விடுவிக்க வேண்டும்.என்று கோரிக்கை விடுத்தார்.