Skip to main content

‘தடை விதிக்க முடியாது...’ - ஐ.பி.எஸ் அதிகாரியின் கோரிக்கை நிராகரிப்பு

Published on 20/03/2025 | Edited on 20/03/2025

 

Chennai High Court rejects selvanagarathinam IPS officer request

கடந்த 2013 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற செல்வநாகரத்திண்டம் ஐ.பி.எஸ் அதிகாரியாக காவல்துறை பயிற்சி மையத்தில் பணியமர்த்தப்பட்டார். பின்பு ஆய்வாளர்கள், துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய செல்வநாகரத்தினர்ம் சென்னை தாமஸ்மவுண்ட் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய செல்வநாகரத்தினம் தற்போது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செல்வநாகரத்தினம் தினமும் பணி தொடர்பாகவும், அன்றாட நிகழ்வுத் தொடர்பாகவும் எதாவது ஒரு பணியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி செல்வநாகரத்தினம் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை பெண் காவல்துறை டிஜிபியிடம் கொடுத்திருந்தார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடன் பழகிய செல்வநாகரத்தினம் அடிக்கடி என்னுடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் தன்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார் எனத் தெரிவித்திருந்தார். 

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, செல்வநாகரத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி அலுவலகத்தில் இருந்து செல்வநாகரத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு 30 நாட்களில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த மெமோவை எதிர்த்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் செல்வநாகரத்தினம் மனுத்தாக்கல் செய்தார். 

இதனை விசாரித்த தீர்ப்பாயம், அந்த மெமோவை ரத்து செய்தது. மேலும் புதிய மெமோ வழங்கலாம் என உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி செல்வநாகரத்தினத்திற்கு புதிய மெமோ வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அடங்கிய பெஞ்ச் அமர்வு மனுவுக்கு பதில் அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை வருகின்ற ஏப்.16ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் மெமோவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று செல்வநாகரத்தினம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
 

சார்ந்த செய்திகள்