Skip to main content

"தடை வந்தாலும் நவம்பர் 17- ஆம் தேதி முதல் வேல் யாத்திரை தொடரும்" -எல்.முருகன் பேட்டி

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

tamilnadu bjp leader l.murugan press meet at chennai

 

தடை வந்தாலும் நவம்பர் 17- ஆம் தேதி முதல் வேல் யாத்திரை தொடரும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், "நவம்பர் 17- ஆம் தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்தியரையை டிசம்பர் 6- ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். சாலை, கோயில், வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வதை ஏற்க முடியாது. கரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை. பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க. தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி. ராகவன் சொன்னது சரிதான். அ.தி.மு.க. உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு. தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால் பா.ஜ.க.வினர் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்