Skip to main content

எழிலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

 

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

 

எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் (மிகச் சொற்ப தொகுப்பூதியத்தில்) பணிபுரிந்து வரும் ஒப்பந்தச் செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

chennai elizhagam dvac search

 

சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டட வளாகத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கு நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பாஸ்கர் என்பவர் உதவி செயற்பொறியாளராக செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

Next Story

தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள் (படங்கள்)

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையரகம் முன்பாக இன்று (10.05.1998) காலை 10 மணியளவில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.