Skip to main content

மத்திய அரசு பணிக்கு திரும்பும் வந்திதா பாண்டே

Published on 07/02/2025 | Edited on 07/02/2025

 

nn

திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டிருந்த வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் தேர்ச்சி பெற்ற வந்திதா பாண்டே புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில், அண்மையில் சில வாரங்களுக்கு முன்பு அவர் திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோல் வந்திதா பாண்டேவின் கணவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான வருண்குமார் திருச்சி சரக டிஐஜியாக நியமம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக வந்திதா பாண்டே  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்