![b22](http://image.nakkheeran.in/cdn/farfuture/VZC9Y30gbQ_lbSA1WL9pwCohxA8-rWeKe6sa_7vwxxE/1648229679/sites/default/files/2022-03/mk2323.jpg)
![b3232](http://image.nakkheeran.in/cdn/farfuture/_iDcJWiMeY0VEjvU_M6cmeuq0wGHT0316YLMNL6AuC0/1648229679/sites/default/files/2022-03/mk21221.jpg)
![b32323](http://image.nakkheeran.in/cdn/farfuture/ryTwcEIxQcngzkN9oRcW46xNmu50xGlISdxhQTdwI28/1648229679/sites/default/files/2022-03/mk132.jpg)
Published on 25/03/2022 | Edited on 25/03/2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25/03/2022) துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர், துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார். இந்த திறப்பு விழாவின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்/ துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.