Published on 08/01/2019 | Edited on 08/01/2019

அண்மையில் ஸ்டெர்லைட்டை ஆலையை திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை அடுத்து ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.