Skip to main content

நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு  தீர்ப்பு வழங்கி உள்ளது சுப்ரீம் கோர்ட் - வைகோ

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
vaiko

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ‘’காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டது வெற்றி என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.  இதில் நாம் ஏமாற்றப்பட்டு உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

 

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முற்றிலும் மாற்றி உள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனில் எதிர் காலத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.  இல்லை என்றால் மேகதாது உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது.

 

விவசாயிகளின் விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கேடு விளைவிக்கும் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது.  மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது’’என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்