Skip to main content

மு.க.ஸ்டாலினும் சீமானும் தமிழகத்தை சுடுகாடாக மற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழிசை காட்டம்!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

 


மு.க.ஸ்டாலினும் சீமானும் தமிழகத்தை சுடுகாடாக மாற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மீண்டும், மீண்டும் தமிழகத்தை போராட்டம் என்ற பெயரில் சுடுகாடாக சீமான் மற்றும் மு.க.ஸ்டாலின் மாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது போராடக்கூடிய தி.மு.க. அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் போகவில்லை என்பது தவறுதான். ஆனால் இப்போது செல்வதை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு.

 

 


மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்குவது தவறு. அங்கு பொதுமக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. யார் சுடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது? என்பதை மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும்.

பயங்கரவாத நிகழ்வு எங்கே நடந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டும். 40 ஆயிரம் பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவரை உளவுத்துறை என்ன செய்தது? மக்கள் போராட்டங்களை மக்களே நடத்த வேண்டுமே தவிர இடையில் வேறு யாரும் புகுந்து விடக்கூடாது.

முந்தைய ஐக்கிய முன்னணி அரசுக்கு இந்த ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பு தெரியாதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார், மு.க.ஸ்டாலின். அவர் ஆட்சிக் கட்டிலில் அமர இது போன்ற வி‌ஷம செயல்களில் ஈடுபடுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்