விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161ன்படி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய நடவைக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுக்க பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம்மாள் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.

தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், கடந்த 11 மாத காலத்திற்கும் மேலாக அந்த தீர்மானம் தமிழக ஆளுநரிடம் கிடப்பில் உள்ளதையும் கோரிக்கை மனுவில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உடனிருந்தார்.