
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக்கூடிய சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலகம் மற்றும் சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இரவு நேர பணியாளர்களும் பணிபுரிகின்றனர். அப்படி இருக்கும் போது நேற்று நள்ளிரவு திடீரென மின்கசிவின் காரணமாக பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் கீழ்த்தளம் தீ பற்றி எரிந்தது. அதன்பின்பு உள்ளிருந்து புகை வருவதை கண்ட இரவு நேர பணியாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பாக உள்ள தீயணைப்பு வாகனம் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கீழ்த்தரத்திலுள்ள ஏசி மற்றும் கணினி பால் சீலிங் மின்னணு சாதனங்கள் மற்றும் பணம் என்னும் இயந்திரங்கள் டிவி என முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இரவு நேரத்தில் முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் சேதம் மதிப்பு கணக்கிட பட முடியவில்லை என இரவு நேர பணியாளர்கள் தெரிவித்தனர். பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் முக்கியமான தொலைத் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ பற்றிய செய்தி திருவண்ணாமலை நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.