Skip to main content

வைரஸ் காய்ச்சலால் அடுத்தடுத்த நாட்களில் இரு சிறார்கள் பலி

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
வைரஸ் காய்ச்சலால் அடுத்தடுத்த நாட்களில் இரு சிறார்கள் பலி

கோவையில் வைரஸ் காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மற்றும் 3 வயது குழந்தை அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த காதர்பாட்சா என்பவரின் 10 வயது மகனான ஷாஜி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 3 வயது குழந்தையான திவ்யஸ்ரீ அதே பாதிப்பினால் இன்று காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.  

அருள்குமார்

சார்ந்த செய்திகள்