Published on 15/04/2019 | Edited on 15/04/2019
வட சென்னை, மாதவரம் எம்.எம்.டி.ஏ. பால் பண்ணை அருகே அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உறவினர் வீட்டில் பணம் இருப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் புழல் நாராயணன், வருமானவரி துறை காவல்துறை தேர்தல் பறக்கும் படையினர் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளார்.
![raid](http://image.nakkheeran.in/cdn/farfuture/_dc6s9sCjhbE9VhOmMWUv_aEiHAFILO3j3mymqH49zY/1555324000/sites/default/files/inline-images/raid_6.jpg)
அத்தகவலின்படி வருமானவரி துறை காவல்துறை தேர்தல் பறக்கும் படையினர் என அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் யாரும் வீட்டினுள் சென்று சோதனை நடத்தவில்லை. அதனை தொடர்ந்து அங்கு குவிந்திருந்தவர்கள் சோதனை நடத்தும்படி அதிகாரிகளை கேட்க, அவர்களோ மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்றி சோதனை செய்ய முடியாது என்று சோதனை செய்யாமலேயே இருக்கின்றனர்.