தமிழக பாஜக தலைவராக நடிகர் ரஜினிகாந்தை நியாமிக்க பாஜக தரப்பில் அவரிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் உலாவிக் கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் கேரளாவில் அஷ்ட மங்கள தேவபிரச்சனம் பார்ப்பதில் பிரபலமானவரான திருச்சூர் காணிப்பையூரை சேர்ந்த நாராயண நம்பூதிரி எட்டு வகையான மங்கள பொருட்களுடன் ரஜினியின் அரசியலை முன்னிலையில் வைத்து தேவபிரச்சனம் பார்த்தாராம்.

அப்போது தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலையொட்டி ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்கி அந்த தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பாராம். அவரின் ஆட்சி நாடு முமுவதும் பரபரப்பாக பேசப்படுமாம். தொடர்ந்து இரண்டுமுறை தனியாக ஆட்சி நடத்துவாராம் என தேவபிரசனத்தில் தெரிய வந்ததாம்.
இதை ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான உண்ணி கிருஷ்ண பணிக்கரும் அந்த தேவபிரச்சனத்தில் கூறியதுபோல் ரஜினியின் அரசியல் அஸ்திரம் இருக்கும் என்று கூறியுள்ளாராம். இந்த தகவல் ரஜினி மக்கள் மன்றத்தினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

தற்போது ரஜினி ரசிகர்களின் வாட்ஸ்அப் குருப்பில் தலைப்பு செய்தியாக இந்த தகவல் ஓடி கொண்டியிருக்கிறது.
இது குறித்து குமரி ரஜினி மக்கள் மன்ற சிறுபான்மை அணி இணைசெயலாளர் சதீஷ்பாபு விடம் நாம் பேசியபோது… தமிழகத்தை எங்கள் தலைவர் ஆளுவர் என்பது ஆண்டவன் போட்ட கட்டளை. அந்த நாளை நாங்கள் மட்டுமல்ல தமிழக மக்களே எதிர்பார்த்து கொண்டியிருக்கிறார்கள். அந்த நாள் அடுத்த சட்டமன்ற தேர்தல் தான.; நாங்களும் நம்பிக்கையோடு தன் இருக்கிறோம் என்றார்.