Skip to main content

கடலுக்கடியில் எண்ணெய் குழாய் உடைப்பு; பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு?

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

 Subsea oil pipeline rupture in Nagai; Respiratory problems for the public?

 

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவன பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் முயற்சியில் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் போராடி வருகின்றனர். கடலில் ஆயிரம் லிட்டர் கணக்கில் எண்ணெய் கலந்ததால் நாகூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்