Skip to main content

மான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடை நீக்கம்.... மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் என்கிற ராபின்சன் 3 துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் மான் வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மான் வேட்டை முடிந்து ஊருக்கு வந்த போது ஒரு விபத்தில் அவரது கார் சிக்கிக் கொண்டதால் திருக்கோகர்ணம் போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது காரில் ரத்தக் கறையும், துப்பாக்கி குண்டுகளும் காணப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. மேலும்  வேட்டையாடப்பட்ட மான் கறி விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ராபின்சன் உள்பட 8 பேர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

  

 Sub divisional development officer involved in the hunting incident suspended ....

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கரூர் காவல்நிலைய போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான இருவர் உள்பட மூன்று பேரும் முன்ஜாமினுக்காக முயற்சித்து வருகின்றனர். இந்தநிலையில் போலீஸ்காரர் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

dd


அதேபோல வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தை மாவட்ட திட்ட அலுவலருக்கு மாவட்ட காவல்துறை தகவல் அனுப்பியுள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில்  மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனை இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள் முன்ஜாமினுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்