பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர்
வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை
சீனாவின் ஹாங்காங் பதிவுஎண் கொண்ட“எமரால்ட் ஸ்டார்” என்ற இந்திய சரக்குகப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 26 மாலுமிகள் பணியாற்றுகின்றனர். பிலிப்பைன்சில் இருந்து 280 கிலோமீட்டர் கிழக்கே பசுபிக் கடல் பகுதியில் சென்ற போது பயங்கர சூறாவளியால் சரக்குகப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
கப்பல் மூழ்கும்போது அபாய சிக்னல் ஜப்பான் கடற்படைக்குகிடைத்ததும் விபத்து நடந்த இடத்திற்கு 3 கப்பல்கள் விரைந்தனர். இந்நிலையில் கடலில் தத்தளித்த 20பேரை ஜப்பான் கடற்படையினர் மீட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியக்கடற்படையினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் 10பேரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் சூறாவளிகாற்றின் வேகம் குறையாததால் தேடுதல் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீட்க்கப்படாமல் உள்ள 10 பேரில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் கௌதம் என்ற இளைஞரும் அடங்குவார். இவர் எந்தநிலையில் உள்ளார் என பெற்றோருக்கு தற்போது வரைதகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் கௌதம் பத்திரமாக வீடு திரும்ப தனியார் பள்ளி மாணவ மாணவியர் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். கௌதம் இப்பள்ளியில் படித்ததால் அவரின் நினைவாக பிராத்தனையில் ஈடுபட்டதாக பள்ளித்தலைமை ஆசிரியர் மதன்பிரபு தெரிவித்தார்.
-முகில்